கோலியை குறை சொன்ன ஆர்சிபி கேப்டன் - தோல்விக்கு காரணமே இதுதான்
ஆர்சிபி தோல்விக்கான காரணம் குறித்து ரஜத் பட்டிதார் பேசியுள்ளார்.
ஆர்சிபி தோல்வி
14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. எனினும் அந்தக் கட்டத்திலும் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்களுடைய பவுலர்கள் கடும் உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கேப்டன் கருத்து
அது சுலபமான காரியம் கிடையாது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கை 18-வது ஒவர் வரை கொண்டு சென்றதே மிகப்பெரிய விஷயமாக நான் நினைக்கின்றேன். எங்கள் பௌலர்களின் செயல்பாட்டை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது.
மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு ஜித்தேஷ் மற்றும் லிவிங் ஸ்டோன், டீம் டேவிட் ஆகியோர் அபாரமாக விளையாடினர். மூன்று விக்கெட்டுகளை இழந்தும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பாசிட்டிவாக விளையாடியது நல்ல விஷயமாக பார்க்கின்றேன்.
எங்கள் அணியின் பேட்டிங் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விக்கெட்டுகள் விழுந்தும் வீரர்கள் அதிரடி காட்டியதை இந்தப் போட்டியில் பாசிட்டிவ் விஷயமாக நான் பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அமெரிக்காவின் புதிய வரி இலங்கையின் ஏற்றுமதிக்கு ஒரு பேரழிவு : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் IBC Tamil
