கண்ணீர் மல்க..விடைபெற்ற தினேஷ் கார்த்திக்; அதுதான் என் விருப்பம் - பயிற்சியாளர் பளீச்!

Royal Challengers Bangalore Dinesh Karthik IPL 2024
By Sumathi May 23, 2024 07:24 AM GMT
Report

தினேஷ் கார்த்திக் குறித்து பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவர் நெகிழ்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

பெங்களூரு அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் இதுகுறித்து பேசுகையில்,

dinesh karthick

'தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்ற முடிந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இதற்கு முன் அவருடன் நெருங்கி பழகியதில்லை. இங்கிலாந்து அணிக்கு நான் பயிற்சியாளராக இருந்தபோது அவர் இந்திய அணியில் வீரராக இருந்தார்.

மும்பை அணியின் ஆஃபர்; நான் செஞ்ச பெரிய தப்பு அது - தினேஷ் கார்த்திக் வேதனை!

மும்பை அணியின் ஆஃபர்; நான் செஞ்ச பெரிய தப்பு அது - தினேஷ் கார்த்திக் வேதனை!

பயிற்சியாளர் உருக்கம்

அப்போது ஒரு டெஸ்ட் போட்டியின் போது லார்ட்ஸில் நானும் அவரும் பேட்டிங் குறித்து நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறோம். சுவாரஸ்யமான உரையாடல் அது. அவர் ஏற்கெனவே மிகச்சிறந்த கமண்டேட்டர். பயிற்சியாளராகும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது.

Andy Flower

அவர் எதைச் செய்தாலும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆனால், அவர் இன்னுமே சில கிரிக்கெட் தொடர்களில் ஆட வேண்டும் என்பது என் விருப்பம். உலகக்கோப்பையிலும் அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அவர் தன்னுடைய ஆட்டத்தை இன்னமும் மெருகேற்றச் செய்துகொண்டே இருக்கிறார். தகவமைத்துக் கொண்டே இருக்கிறார். அபாரமான சாதனைகளைச் செய்திருக்கிறார் என உருக்கமாக பேசியுள்ளார்.