உரித்து தொங்கவிடப்பட்ட கோலி அணி - சோதனை மேல் சோதனை..!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி 92 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி ஆட்டங்களில் இன்று நடைபெற்ற 2 ஆம் நாள் ஆட்டத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு வீரர்கள் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி 5 ரன்கள், ஏபிடிவில்லியர் ரன் ஏதும் எடுக்காமலும் ஏமாற்றமளித்தனர்.
அதிகப்பட்சமாக படிக்கல் 22 ரன்கள், ஷிகர் பரத் 16 ரன்கள், ஹர்ஷல் படேல் 12 ரன்கள்,மேக்ஸ்வெல் 10 ரன்கள் எடுக்க 19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே ஆல் அவுட்டானது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.