எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கேட்கவேயில்லை: ஆர்.பி. உதயகுமார்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கேட்கவேயில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியாக அமைந்த அதிமுகவில் சட்டமன்ற தலைவராக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடையே ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அந்தக் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருவருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கேட்கவே இல்லை என்றும், அவர் வேறு ஒருவருக்குத் தான் முன் மொழிந்தார் என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.