எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் பாரப்பட்சம்...ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு...
Covid vaccine
Tn government
Rb udhayakumar
By Petchi Avudaiappan
எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் தமிழக அரசு பாரப்பட்சம் காட்டப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அணீஸ் சேகரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது" என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.