அதிகரிக்கும் ரெப்போ வட்டி விகிதம் : கடன் வட்டி உயர வாய்ப்பு
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி என்றால் என்ன?
இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்ற வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடனுக்கு வட்டி விதிக்கும். இந்த வட்டி விகிதத்தின் பெயரே "ரெப்போ ரேட்" என்றழைக்கப்படுகிறது.

இந்தியாவில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை குழு கூடுவது வழக்கம்.அதன்படி 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகளாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
கடன் அதிகரிக்க வாய்ப்பு
இது 4.40 புள்ளிகளாக உயர்ந்தது. மேலும் இதன் தொடர்ச்சியாக சென்ற மாதம் ஜூன் 8 ஆம் தேதி அன்று இந்த குழு கூடி 0.50 சதவீதமாக மீண்டும் உயர்த்தியது.
இந்நிலையில் தற்போது மும்பையில் நடந்த நிதி குழு கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி 4.90% நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக உயர்ந்துள்ளதால் வாகனம்,வீடு மற்றும் தனி நபர் வாங்கும் கடனுக்கு வட்டி அதிகமாகும். மேலும் கடன் தவணையை கட்ட தவறினால் கட்டணம் அல்லது தவணை ஆண்டு காலம் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ்
வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan