இனி இந்திய ரூபாய் தான்; டாலர் இல்லை - 18 நாடுகளுக்கு அனுமதி!

India
By Sumathi Mar 16, 2023 05:51 AM GMT
Report

18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இனி இந்திய ரூபாய் தான்; டாலர் இல்லை - 18 நாடுகளுக்கு அனுமதி! | Rbi Allows Foreign Banks From 18 Countries Vostro

இதன் மூலம் இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்ய முடியும்.

ரூபாய்க்கு அனுமதி 

இதனால், குளோபல் டிரேட்-க்கு ஊக்கம் அளிப்பது மட்டும் அல்லாமல் உலகளவில் ரூபாய்க்கான டிமாண்ட் அதிகரிக்கும். இதன் மூலம் ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் உயரும். ஆர்பிஐ 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு சுமார் 60 ஒப்புதல்களை அளித்துள்ளது.

இனி இந்திய ரூபாய் தான்; டாலர் இல்லை - 18 நாடுகளுக்கு அனுமதி! | Rbi Allows Foreign Banks From 18 Countries Vostro

எனவே, இனி வெளிநாட்டு வர்த்தகத்திற்கு டாலருக்கு ரூபாயை மாற்ற தேவையில்லை, இதற்காக எக்ஸ்சேஞ்ச் கட்டணமும் செலுத்த தேவையில்லை.