அதிமுக தோல்விக்கு காரணம் தொண்டர்களா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சர்ச்சை

Rb udhayakumar Admk
By Petchi Avudaiappan Jul 02, 2021 02:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

தொண்டர்களின் உள்குத்து, வெளிக்குத்து தான் அதிமுக ஆட்சியைப் பறிகொடுத்தது ஆக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் வளாகத்தில், மதுரை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், மே இரண்டாம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் நடந்தது என்ன, தீர்ப்பு மாறிவிட்டது என கூறினார். 

அதிமுக தோல்விக்கு காரணம் தொண்டர்களா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சர்ச்சை | Rb Udhayakumar Talks About Admk Members

மேலும் இதனை நாம் விவாதிக்கின்ற போதுதான் கட்சிக்குள் உள்குத்து, வெளிக்குத்து இருந்ததாலேயே நாம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு இருந்தால் அதிமுக என்ற இயக்கத்தை யாரும் வெல்ல முடியாது. அதிமுகவை வெல்லுகிற சக்தியால் நாம் தோற்கடிக்கப்படவில்லை. அதிமுகவை வெல்லுகிற சக்தி எங்கேயும் இல்லை. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் மக்கள் நமக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.

ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தில் நாம் 1 கோடியே 46 லட்சம் வாக்குகள் வாங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஒரு கோடியே 46 லட்சம் வாக்கு பெற்ற நமக்கு பொங்கலுக்கு கரும்பு 2,500 ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை வாங்கிச் சென்ற குடும்பத்தினர் குடும்பத்திற்கு ஒரு ஓட்டு போட்டு இருந்தாலே நாம் ஆட்சியில் நிலைத்திருக்கலாம். நமக்கு தோல்வி கிடைத்த இடங்களில் வாக்கு வித்தியாசம், மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.