சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஆர்.பி.சௌத்ரி உடல்
Chennai
By Yashini
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நடிகர் ஜீவாவின் தந்தையான இவர் தனது சொந்த ஊரான உதய்பூருக்கு சென்றநிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அவரது உடலிற்கு நாளை காலை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.