குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக யாருக்கு வாக்களிக்கும்?

DMK BJP
By Sumathi Jun 28, 2022 08:14 PM GMT
Report

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற 50க்கும் அதிகமான சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுவதற்கு 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது.

பாஜக நிறுத்தும் வேட்பாளரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு மற்ற கட்சிகள் சிலவற்றின் ஆதரவு தேவைப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் பதவிக்கு, பிரதீபா பாட்டிலுக்கு பிறகு வேட்பாளராக களமிறங்கும் இரண்டாவது பெண் திரெளபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக-வின் நிலைப்பாடு குறித்து கூறும் ரவிந்திரன் துரைச்சாமியின் நேர்க்காணல் இதோ...