‘‘ஜடேஜாவால் விக்கெட் எடுக்க முடியாது’’ : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கம்

Ravindra Jadeja Cricket India
By Irumporai Aug 15, 2022 10:43 AM GMT
Report

உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :  20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

‘‘ஜடேஜாவால் விக்கெட் எடுக்க முடியாது’’ : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கம் | Ravindra Jadeja Wickets World Cup Aakash Chopra

அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை.

ஜடேஜா

அக்‌ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார். ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது.

20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர். அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.