கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவிட்ட ட்வீட்டிற்கு ரவீந்திர ஜடேஜா தக்க பதிலடி ; சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு

tweet kolkata knight riders england vs australia match draw jadeja respond
By Swetha Subash Jan 10, 2022 06:19 AM GMT
Report

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து போட்டியை போராடி டிரா செய்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம் பேர் பேட்ஸ்மேனை சுற்றி நின்று ஃபில்டிங் செய்தனர்.

இந்தப் படத்தை பதிவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ட்வீட் செய்திருந்தது. அதில்,

“டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கிளாசிக் ஃபில்டிங் டி20 கிரிக்கெட்டில் நம்முடைய மாஸ்டர் ஸ்டோர்க் ஐடியாவை நினைவுப்படுத்துகிறது” எனப் பதிவிட்டிருந்தது.

அத்துடன் புனே வாரியர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வைக்கப்பட்டிருந்த ஃபில்டிங் தொடர்பான படத்தையும் பதிவிட்டிருந்தது.

இந்தப் பதிவிற்கு பதில் பதிவாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, “இது மாஸ்டர் ஸ்டோர்க் அல்ல ஒரு விளம்பரம் போன்ற ஷோ ஆஃப்” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் கடுமையான விமர்சனத்திற்கு காரணம் அந்தப் படத்தில் சிஎஸ்கே மற்றும் இந்திய முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் ஆடுவது போல் இருப்பது தான்.

அவரின் இந்தப் பதிவை பல சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.