500 விக்கெட்டுக்களை வீழ்த்தி 2-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜடேஜா...!

Ravindra Jadeja Cricket Indian Cricket Team
By Nandhini Mar 01, 2023 10:50 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா.

மீண்டும் களத்தில் இறங்கும் ரவீந்திர ஜடேஜா

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அத்தொடரிலிருந்து விலகினார்.

இதனையடுத்து, காயம் ஏற்பட்ட காலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பல மாதங்கள் அவர் ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் நலம் பெற்று மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வலை பயிற்சியை மேற்கொண்டார்.

ravindra-jadeja-to-achieve-the-milestone

ஜடேஜா சாதனை

இன்று நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுக்களை கடந்துள்ளார். கபில் தேவ்க்கு பிறகு, 5000 ரன்கள், 500 விக்கெட்டுக்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா.