ஜடேஜாவை வெளியேற்றும் சிஎஸ்கே ? அடுத்து அவர் செல்லும் அணி எது தெரியுமா ?
சிஎஸ்கே அணியிலிருந்து ஜடேஜா ட்ரேடிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது,கடந்த ஐபிஎல் போட்டிக்காக மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் வரும் ஆண்டு மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் இரு அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக்கொள்வார்கள்.
ஜடேஜா
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஜடேஜா விலகுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜடேஜா ட்ரேடிங் செய்ய முடிவெக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது , அவருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை மீண்டும் அணிக்கு இழுப்பார்கள் என கூறப்படுகிறது.
ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ட்ரேடிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையே ட்ரேடிங் நடக்கவுள்ளது. இதே போல பென் ஸ்டோக்ஸையும் வாங்குவதற்கு சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.