ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேல் காரணம் என்ன ?
ஆசிய உலகப் கோப்பை துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய உலகப் கோப்பை
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
அக்சர் படேல்
33 வயதான ஜடேஜா, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று ஃபார்மெட்டிலும் விளையாடி வருகிறார். மொத்தம் 64 சர்வதேச டி20 போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.
பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் கைதேர்ந்த வீரர். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரது ஆட்டம் இந்தியா வெற்றி பெற கைகொடுத்தது.
ஹாங்காங் அணிக்கு எதிராக அற்புதமான ரன் அவுட்டும் எடுத்திருந்தார். தற்போது காயம் காரணமாக ஜடேஜா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.
NEWS - Axar Patel replaces injured Ravindra Jadeja in Asia Cup squad.
— BCCI (@BCCI) September 2, 2022
More details here - https://t.co/NvcBjeXOv4 #AsiaCup2022
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.