'வணக்கம் சென்னை' என்று டுவிட் செய்த ரவீந்திர ஜடேஜா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!
சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜோ, 'வணக்கம் சென்னை' என்று டுவிட் செய்துள்ளார்.
மீண்டும் களத்தில் இறங்கும் ரவீந்திர ஜடேஜா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அத்தொடரிலிருந்து விலகினார்.
இதனையடுத்து, காயம் ஏற்பட்ட காலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பல மாதங்கள் அவர் ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் நலம் பெற்று மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வலை பயிற்சியை மேற்கொண்டார்.
வரும் செவ்வாய்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற உள்ளது. இத்தொடரில், தமிழ்நாடு - சவுராஷ்டிரா இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா இடம்பெற்றிருக்கிறார். இதற்காக ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளார்.
‘வணக்கம் சென்னை’ - ஜடேஜா டுவிட்
இந்நிலையில், சென்னை வந்துள்ள ஜடேஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'வணக்கம் சென்னை' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் ஜடேஜா களத்தில் இறங்கப்போவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Vanakkam Chennai..?
— Ravindrasinh jadeja (@imjadeja) January 22, 2023