மன்மத சாமி , மந்திர சாமி போக்கிரி சாமி : அல்லு அர்ஜூனாக மாறிய ஜடேஜா வைரலாகும் புகைப்படங்கள்

ravindrajadeja pushpamovie
By Irumporai Jan 13, 2022 05:34 AM GMT
Report

புஷ்பா திரைப்படத்தின் மீது அதிக ஈர்ப்பை பெற்ற ரவீந்திர ஜடேஜா, அதற்காக தனது கெட்டப்பையே மாற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் நாடு முழுவதும் படு மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அதில் வரும் பஞ்ச் வசனங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்அல்லு அர்ஜுனின் தோற்றத்தை போன்றே ஹேர்ஸ்டைல், தாடி, உடை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் இணையத்தை தெரிக்கவிட்டு வருகிறது.

மேலும் அதில், "புஷ்பானா ஃப்ளவர்னு நினச்சியா.. ஃபையர் என" வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஜடேஜா, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தயங்கவில்லை. அந்த புகைப்படத்தில் ஜடேஜா பீடியை வாயில் வைத்திருப்பது போன்று உள்ளது.

இதற்கு அவர், " கிராப்பிக் காட்சிகளுக்காக மட்டுமே புகைப்பிடிப்பது போன்று உள்ளது. நிஜமாக நான் ஒன்றும் புகைப்பிடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக உள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஓய்வில் இருக்கும் அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்த சமூக வலைதளங்களில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். தென்னாப்பிரிக்க தொடர் முடிவதற்குள் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.