இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : ரவீந்திர ஜடேஜா அசத்தல் சதம்

ravindrajadeja INDvSL
By Petchi Avudaiappan Mar 05, 2022 06:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் மழை பொழிந்து வருகிறது. 

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோகித்  சர்மா 29, மயங்க் அகர்வால் 33, விராட் கோலி 45, ஹனுமா விகாரி 58, ரிஷப் பண்ட் 96 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்

இதனிடையே இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பேட்டிங்கை தொடர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவருக்கு பக்க பலமாக இருந்த அஸ்வின் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 450 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா எடுத்த 2வது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.