இந்த நாட்டுக்குத்தான் நாங்கள் ஹனிமூன் போகப்போறோம்...; நயன் - விக்கிக்கே டஃப் கொடுக்கும் ரவீந்தர் - மகாலட்சுமி
ஹனிமூன் குறித்து ரவீந்தர் - மகாலட்சுமி பேசியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவீந்தர் திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.
கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி
சமீபத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹனிமூனுக்கு பறக்கப்போகும் ஜோடி
இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில், எந்த இடத்தில் ஹனிமூன் செல்வதைக் கூறித்து பேசியுள்ளார். ஐரோப்பா அல்லது லண்டனில் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும், தல தீபாவளி கொண்டாடிவிட்டு, நவம்பர் மாதம் ஹனிமூனுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவரும் நயன்-விக்கிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.