திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமியை விட்டு பிரியும் ரவீந்தர் - ஆசை நிறைவேறுமா?

Raveendran Tamil Cinema Bigg Boss Marriage Mahalakshmi
By Thahir 2 மாதங்கள் முன்

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தன் காதல் மனைவி மகாலட்சுமியை விட்டு ரவீந்தர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் 

அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி. இவர்களின் திருமணம் தான் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி. இதற்கு ஆதாரமாக தினமும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் ரவீந்தர்.

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமியை விட்டு பிரியும் ரவீந்தர் - ஆசை நிறைவேறுமா? | Ravinder Leaves Mahalakshmi After Marriage

திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் அதற்கு அசால்டாக பதில் அளித்து வருகிறது ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி.

இந்த நிலையில் இந்த ஜோடியை வைத்து ஒரு ஸ்பெஷல் ஷோவே நடத்தி முடித்துள்ளது விஜய் டிவி. வந்தாள் மகாலட்சுமி என்ற இத்தொடர் வரும் ஆயுதபூஜை அன்று ஒளிப்பரப்ப பட உள்ளது. இதனிடையே ரவீந்தர் பற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மகாலட்சுமி ஆசை நிறைவேறுமா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவியூ செய்து வந்த ரவீந்தர் தற்போது வரப்போகும் பிக் பாஸ் 6வது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமியை விட்டு பிரியும் ரவீந்தர் - ஆசை நிறைவேறுமா? | Ravinder Leaves Mahalakshmi After Marriage

அக்டோபர் 9ம் தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளது பிக் பாஸ் சீசன் 6.இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் பெயரும் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 6ல் ரவீந்தர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமியை விட்டு பிரியும் ரவீந்தர் - ஆசை நிறைவேறுமா? | Ravinder Leaves Mahalakshmi After Marriage

தல தீபாவளி கொண்டாடுவதற்காக தான் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மகாலட்சுமி ஆசை நிறைவேறுமா? என்பது அக்டோபர் 9 ம் தேதி தெரிந்து விடும்.