பணத்துக்காக தான்.. 3 மாசம் தாங்காது; பிரச்சனையே எங்க கல்யாணம் தான் - ரவீந்தர் ஆதங்கம்!
இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான் என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
ரவீந்தர் பதிவு
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
தற்போது வரை இருவரும் வைரலாக பேசப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரவீந்திர் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஒரு வருடம் மிகவும் வேகமாக போய்விட்டது. போன வருடம் இந்த நாட்டோட பிரதான பிரச்சனையை எங்கள் கல்யாணம்தான்,
திருமண நாள்
போற இடமெல்லாம் எங்களை ஒரு மாதிரியாக மாறியாக பார்த்தார்கள். இது எப்படி என்று ஆராய்ச்சி செய்தனர். பணத்துக்காக தான் நாங்கள் சேர்ந்ததாக கூறினார்கள். ஆனால் எல்லா விமர்சனங்களையும் முறியடித்து நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
முதலில் கூட நான் என் மனைவியை ஒரு மாதிரியாக நினைத்தேன். சீரியல் நடிகை என்றால் வேலைக்காரி எல்லாம் வைத்து மிகவும் ஆடம்பரமாக இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் காலையில் எழுந்து கோலம் போடுவது, சூப்பரான காபி மற்றும் சுமாரான சமையல் செய்வது எல்லாமே பார்த்து அசந்து விட்டேன்.
சமையல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.
எங்கள் லவ் உங்க வீட்டு லவ், எங்க வீட்டு லவ் அல்ல, முரட்டு லவ். அவர் மீது நானும் என் மீது அவரும் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றோம், விமர்சனம் செய்பவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை எனக் குறிப்பிட்டு சமீபத்தில் தங்களது திருமண நாளை இருவரும் கொண்டாடியுள்ளனர்.