உச்சக்கட்ட நெருக்கத்தில் ரவீந்தர் மகாலட்சுமி; மீண்டும் வெளியான புகைப்படம் - புலம்பும் 90 கிட்ஸ்

By Nandhini Sep 09, 2022 01:49 PM GMT
Report

மீண்டும் உச்சக்கட்ட நெருக்கத்தில் ரவீந்தர், மகாலட்சுமியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரவீந்தர் திருமணம்

சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.

கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி

சமீபத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ravindar-mahalakshmi-viral-photo

மீண்டும் வெளியான நெருக்கமான புகைப்படம்

இந்நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் நெருக்கமாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள்... என்னப்பா... இங்க இருவரும் நயன்-விக்கிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.... என்றும், நீங்க எப்படின்னா இருந்துட்டு போங்க.. இந்த மாதிரி போட்டோல்லாம் தயவுசெய்து வெளியிடாதீங்க... நாங்க 90 கிட்ஸ்.. இதெல்லாம் பார்த்தா எங்களுக்கு வயறு எரியாதா... பாவம் நாங்கல்லாம்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.    

ravindar-mahalakshmi-viral-photo

ravindar-mahalakshmi-viral-photo