விஜய் டிவி வெளியிட்ட ‘ட்ரெண்டிங் கப்பிள்’ ரவீந்தர் - மகாலக்ஷ்மி திருமண promo - வைரலாகும் ப்ரொமோ
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.
விஜய் டிவி ட்ரெண்டிங் கப்பிள் நிகழ்ச்சி
இந்நிலையில், இன்று விஜய் டிவி ஒரு ப்ரொமோவை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், ட்ரெண்டிங் கப்பிளான ரவீந்தர் மகாலக்ஷ்மியை ‘வந்தாள் மகாலக்ஷ்மியே’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ப்ரொமோவைப் பார்த்த நெட்டிசன்கள், என்ன இப்படி யூட்யூப் சேனல் மாதிரி ஆகிவிட்டீர்கள்.... என்று தங்கள் பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.