கர்மா சும்மா விடாது… ரவீந்தர் திருமணம் குறித்து மறைமுகமாக சாடிய வனிதா - ஷாக்கான ரசிகர்கள்
நடிகை வனிதாவின் டுவிட்டர் பதிவு ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவீந்தர் திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வனிதா டுவிட்டர் பதிவு
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை வனிதா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். கர்மா யாரையும் சும்மா விடாது. அதை திருப்பி கொடுக்க தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதாவின் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி, இவர் ரவீந்தரை மறைமுகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.