திடீரென தனி விமானத்தில் மகாலட்சுமியுடன் பறந்த ரவீந்தர்? - வைரலாகும் புகைப்படம்
விமானத்தின் அருகில் மகாலட்சுமியுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரவீந்தர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
ரவீந்தர் திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.
கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி
சமீபத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹனிமூன் குறித்து பேசிய ரவீந்தர்
சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில், ஐரோப்பா அல்லது லண்டனில் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும், தல தீபாவளி கொண்டாடிவிட்டு, நவம்பர் மாதம் ஹனிமூனுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
புகைப்படம் வெளியிட்ட ரவீந்தர்
இந்நிலையில், தற்போது தனது மனைவியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ரவீந்தர்.
அந்தப் பதிவில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் தனி விமானத்தில் பெலைஸ் தீவுக்கு ஹனிமூனுக்கு சென்றார்... என்று தயவு செஞ்சு அப்படியெல்லாம் போட்டு விடாதீங்க. நாங்க திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் கிட்ட குலதெய்வம் கோவிலுக்கு போறோம். இந்த போட்டோவை ஸ்கிரிப்டா செஞ்சிடாதீங்க என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில் கோவில் முன் எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எண்ணுடுய குலம் செழிக்க வந்தவள் நீ. இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு. நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி. நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி. ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம். என்றும் உங்கள் ரவி & மிஸஸ் ரவி” என குறிப்பிட்டிருக்கிறார்.