எவ்வளவு பெரிய பிரச்சனையில் எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி- கே.எஸ்.ரவிக்குமார்
பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நேற்று முன் தினம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சொந்தமாக ஒரு வீடு கட்டவேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. கனவு நிஜமாக நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை வந்துவிட்டது. எதிர்த்து கேட்ட பின் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிட்டது.
என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டே வந்தவர், மற்றவற்றை அடுத்த வீடியோவில் பேசுவோம் என்று சொல்லி விட்டார். இந்த வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவி வைரலானது.

தற்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், வணக்கம். நேத்து நான் போட்ட வீடியோவுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்குமுன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உங்களுக்கு மிக்க நன்றி. நான் ஒரு சொந்த வீடு கட்டுனேன், அதைச் சுற்றிலும் ஒரு மதில் சுவர் கட்டுவேன் இல்லையா? எனக்கு சொந்தமான மதில் சுவற்றை என்னை கேட்காமல் இந்த கட்சிக்காரர்கள் வந்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதில் என்ன நியாயம்? என் சுவர் என் உரிமை என்று நான் தட்டிக்கேட்டேன். அதனால்தான் இந்த பிரச்சனை எனக்கு வந்தது. அது என்ன பிரச்சனை? எவ்வளவு பெரிய பிரச்சனை? அதை எப்படி சமாளிச்சேன் என்பதை நான் உங்களுக்கு சொல்றேன்; சாரி, அதை காட்டுறேன்என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.