"பிரச்சினை பெரிதாகிவிட்டது": கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்ட பரபரப்பு காணொளி

video director Padayappa ravikumar
By Jon Mar 25, 2021 03:00 PM GMT
Report

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். கூகுள் குட்டப்பன் என்ற படத்தினை தயாரித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் – லாஸ்லியா நடிக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் குட்டப்பன் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பரபரப்பு வீடியோவினை வெளியிட்டிருக்கிறார். அதில், ''சொந்தமாக ஒரு வீடு கட்டவேண்டும் என்று எனக்கு கனவு இருந்தது. கனவு நிஜமாக நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எதிர்த்து கேட்ட பின் பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதனால்தான் நான் உங்களிடம் பேசுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டே வந்தவர், ''மற்றவற்றை அடுத்த காணொளியில் பேசுவோம்'' என்று சொல்லிவிடுகிறார். இது உண்மையிலேயே வீட்டு பிரச்சனைதானா? இல்லை பட புரொமோசன் வேலையாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.