அஸ்வினை ஓரம் கட்டிய கோலி- காரணம் இது தான்! மனம் திறந்த ஜாகீர் கான்
இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின் இங்கிலாந்து அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது குறித்து முன்னாள் வீரரான ஜாஹிர் கான் தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில், மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சொந்தப்பினாலும் ரவிச்சந்திர அஸ்வின் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகள் எடுத்து கொடுத்தார்.
டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ரவிச்சந்திர அஸ்வினுக்கோ இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜாவிற்கே இடம் கிடைத்து வருகிறது, அஸ்வினுக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணி இந்த தொடரில் ஒரு வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், ரவிச்சந்திர அஸ்வின் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அணியின் இந்த முடிவு முற்றிலும் தவறானது என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹிர் கானும், அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஜாஹிர் கான் பேசுகையில், 'மேட்ச் வின்னர்கள் எப்போதுமே மேட்ச் வின்னர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னை பொறுத்தமட்டில் அவர் ஒருவர் தான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர். அதுவும் அவர் மிகப்பெரிய வீரர்.
இந்திய அணியை பொறுத்தமட்டில் ஏற்கனவே ஜடேஜா ஸ்பின்னராக ஆடுகிறார். எனவே கண்டிஷனை கருத்தில்கொண்டு ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லாதது அணியை பாதிக்கிறது' என்று ஜாகீர் கான் தெரிவித்தார்.