லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த அஸ்வின் - இடம் கொடுத்த விராட் கோலி

Virat Kohli Ravichandran Ashwin T20 World Cup
By Thahir Oct 18, 2021 09:32 AM GMT
Report

அஸ்வினுக்கு டி.20 உலக்கோப்பையில் இடம் கொடுத்ததற்கான காரணத்தை விராட் கோலி வெளியிட்டுள்ளார். டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியையும், 20ம் தேதி நடைபெறும் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.

அதே போல் 24ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. டி.20 உலகக்கோப்பை இன்று துவங்குவதால் கேப்டன்களுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடத்தப்பட்டது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த அஸ்வின் - இடம் கொடுத்த விராட் கோலி | Ravichandran Ashwin Virat Kohli T20 World Cup

இதில் இந்திய கேப்டன் விராட் கோலியும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்தார். இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்..?

யுஸ்வேந்திர சாஹலுக்கு ஏன் அணியில் இடம் கிடைக்கவிலை..? உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து ஓபனாக பேசிய விராட் கோலி, அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுத்ததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து விராட் கோலி பேசுகையில், 'அஷ்வினின் திறமைக்கு கிடைத்த வெகுமதிதான் இந்த வாய்ப்பு. ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக திகழ்ந்த அஷ்வினின் பவுலிங்கில் இடையில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால் அஷ்வின் அவரது பவுலிங்கை மேம்படுத்தியுள்ளார். ஐபிஎல்லில் கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அஸ்வின் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதால் தான் அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஃப் ஸ்பின்னர் ஒருவர் தேவை என்ற வகையில், அஷ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது அனுபவமும் திறமையும் தான் அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க காரணம்' என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.