டெல்லி அணிக்கு புதிய கேப்டன் - கம்பீர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

delhicapitals ravichandranashwin gautamgambhir ipl2022
By Petchi Avudaiappan Oct 16, 2021 09:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் டெல்லி அணி குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

 2021 ஐபிஎல் தொடர் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக டைட்டில் பட்டத்தை வென்று அசத்தியது.அதற்கு முந்தைய போட்டியான குவாலிபயர் 2 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் இடையிலான போட்டியில் டெல்லி அணி தோல்வியைத் தழுவி வெளியேறியது.

டெல்லி அணிக்கு புதிய கேப்டன் - கம்பீர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு | Ravichandran Ashwin To Captain Delhi Capitals

அந்த போட்டியில் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இருந்தது. அப்பொழுது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஓவரை வீசிய ரவிச்சந்திர அஸ்வின் வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ராகுல் திரிபாதி 5வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அஸ்வினை 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று  முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.  உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான அவருக்கு தான் தீவிர ரசிகன் எனவும் கம்பீர் கூறியுள்ளார்.