ஜெயிக்கனும்னு கட்டாயம் இல்லையே - தோல்விக்கு அஸ்வின் பதிலடி

Sumathi
in கிரிக்கெட்Report this article
இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
விமர்சனங்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகளில் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்று ஆஸ்திரேலிய அணி அசத்தியது. இந்திய பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உள்ளிட்டோர் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் இங்கு உள்ளது. ஆனால் அது நியாயமே கிடையாது. இந்தியா பலமான அணி எனக்கூறுகின்றனர்.
அஸ்வின் பதிலடி
அதில் சந்தேகம் இல்லை தான், ஆனால் அதற்காக தோல்வியே இருக்கக்கூடாதா? சில சமயங்களில் ரசிகர்கள் கூறும் கருத்துக்கள் கடுமையானதாக உள்ளது. வல்லுநர்களும் புரிந்துக்கொள்ளாமல் சில சமயம் கடுமையாக பேசிவிடுகின்றனர்.
2011 உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணியில் ஒரு நிலையான தன்மை இருந்தது. தற்போது அந்த நிலையை உருவாக்கதான் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான கால அவகாசம் என்னவென்பதை வல்லுநர்கள் அறிவார்கள். அவர்களும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி தான் உள்ளனர். எனவே அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.