‘டி20 உலககோப்பையை ஜெயிக்கணும்னா மேட்ச்ல அந்த பையன் கண்டிப்பா தேவை’ - தமிழக வீரரை குறிவைத்த கவாஸ்கர்!

Ravichandran Ashwin Sunil Gavaskar
By Swetha Subash May 24, 2022 06:52 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அஸ்வின் தேவையானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ரவிசந்திரன் அஸ்வின் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

‘டி20 உலககோப்பையை ஜெயிக்கணும்னா மேட்ச்ல அந்த பையன் கண்டிப்பா தேவை’ - தமிழக வீரரை குறிவைத்த கவாஸ்கர்! | Ravichandran Ashwin Needed In T20Worldcup Gavaskar

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்து வரும் 35 வயதான அஸ்வின் இதுவரை 14 ஆட்டத்தில் 10 இன்னிங்சில் ஆடி 183 ரன்கள் எடுத்தார். டெஸ்டில் இவரது ஸ்டிரைக்ரேட் 146.40 ஆகும். ஒரு அரை சதம் அடித்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தினார்.

 மேலும், சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன் (அவுட் இல்லை) எடுத்து ராஜஸ்தான் அணி 2-வது இடத்தை பிடிக்க காரணமாக திகழ்ந்தார் அஸ்வின்.

இந்நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

‘டி20 உலககோப்பையை ஜெயிக்கணும்னா மேட்ச்ல அந்த பையன் கண்டிப்பா தேவை’ - தமிழக வீரரை குறிவைத்த கவாஸ்கர்! | Ravichandran Ashwin Needed In T20Worldcup Gavaskar

“எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். 5 சதம் எடுத்துள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அஸ்வின் தேவையானவர். அவரை தேர்வு செய்ய வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதிக்கும் அவர் நீக்கப்படக்கூடியவர் அல்ல.” என கவாஸ்கர் கூறியுள்ளார்.