அஸ்வின் வேண்டாம் இந்த வீரர் மட்டும் போதும் விராட் கோலிக்கு அட்வைஸ் கொடுத்த தோனி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி துபாயில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்த முறை பாகிஸ்தான் அணி சற்று வலிமையானதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியை எதிர்க்கவுள்ள பாபர் அசாம் தலைமையிலான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் பேட்டிங் மற்றும் பவுலிங் என குறிப்பிட்ட சில வீரர்கள் அச்சுறுத்தல் கொடுக்க காத்துள்ளனர். இந்நிலையில் இதனை சமாளிக்கப்போகும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும், முதல் விக்கெட்டிற்கு விராட் கோலியும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
ஆனால் மிக முக்கியமான 3 இடங்களுக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது விராட் கோலிக்கு அடுத்தபடியாக 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற குழப்பம் இருந்தது.
சூர்யகுமாரை விட இஷான் கிஷான் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆனால் அவரை ஓப்பனிங்கில் மட்டுமே முயற்சி செய்து பார்த்திருப்பதால் மிடில் ஆர்டரில் களமிறக்கி ரிஸ்க் எடுக்க கோலி விரும்பவில்லை எனத் தெரிகிறது.
எனவே சூர்யகுமார் தான் ப்ளேயிங் 11ல் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக அணியின் ஆல்ரவுண்டர் ஸ்பின்னராக ஜடேஜா உறுதியாகிவிட்டார்.
ஆனால் மெயின் ஸ்பின்னராக அஸ்வின் - வருண் சக்கரவர்த்தி இடையே போட்டி நிலவுகிறது. இருவருமே சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் வருணின் முழங்கால் காயம் சிந்திக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அவரின் எகானமி ரேட் மிகச்சிறப்பாக இருப்பதால் அவரை பயன்படுத்தவே இந்திய அணி பெரிதும் விரும்புகிறது எனத் தெரியவந்துள்ளது.
கடைசியாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் இருப்பாரா அல்லது முகமது ஷமி இருப்பாரா என்ற கேள்வி உள்ளது.
பயிற்சி போட்டியில் இவர்கள் இருவருமே ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், பாகிஸ்தான் போன்ற அணிகளை சமாளிக்க இந்த சீனியர் வீரர்களில் யாரேனும் ஒருவரை நிச்சயம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதில் என்ன முடிவெடுப்பார்கள் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார் / முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
