உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: முதலிடம் பிடித்த அஸ்வின்

World test championship R Ashwin
By Petchi Avudaiappan Jun 24, 2021 02:08 PM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி வீரர் அஸ்வின் 71 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரை தொடர்ந்து கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 70 விக்கெட்டும், பிராட் (இங்கிலாந்து) 69 விக்கெட்டும், சவுத்தி (நியூசிலாந்து) 56 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 13 டெஸ்டில் 1675 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். ஜோரூட்டுக்கு (இங்கிலாந்து) 1660 ரன்கள் எடுத்து 2-வது இடம் பிடித்துள்ளார்.