உண்மையை போட்டு உடைத்த ரவிச்சந்திர அஸ்வின்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தை பற்றி இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று இந்திய அணியின் சில முன்னாள் வீரர்களே கருத்து தெரிவித்த நிலையில் இந்திய அணி அதிரடியாக செயல்பட்டு அபார வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.
இந்திய அணியின் இந்த அசாத்திய வெற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான முகமது சிராஜ், ஷமி, கே.எல் ராகுல், பும்ராஹ் போன்ற வீரர்கள் அதிகமாக பாராட்டப்பட்டு வருகின்றனர். அதே போல் மோசமான தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைப் பற்றி ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்ததாவது, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான்தான் விளையாடுவதாக இருந்தது.
போட்டிக்கு முன்காய்ந்த நிலையில் இருந்ததால் நிச்சயம் நான் தான் விளையாட வேண்டும் என்று நாங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தோம் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மழை பெய்து விட்டதால் அந்த வாய்ப்பு வீணாகி விட்டது என்று ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்திருந்தார்.
தனக்கு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது மிகவும் கவலை அளித்தது என்று அஸ்வின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் வல்லுனர்களும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தான் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரவீந்திர ஜடேஜா விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.