சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்..இதெல்லாம் இந்திய அணிக்கு நல்லதல்ல முன்னாள் வீரர்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம் தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார்.
நேற்று பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது கடந்தகால நிகழ்வுகள் குறித்து இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார்,குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டி குறித்து மனம் திறந்து பேசினார்.
அதில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்தியாவின் தலைசிறந்த நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான் என்று கூறியதை கேட்டு நான் மிகவும் ஆடிப்போய்விட்டேன்,
ஆஸ்திரேலிய மைதானத்தில் குல்திப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்,ஆனால் என்னால் 5 விக்கெட்களை விழ்த்த முடியவில்லை.
இருந்தபோதும் சகவீரரின் முன்னேற்றத்தைக் கண்டு நான் பொறாமை படவில்லை நானும் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டேன் மேலும் அந்த தொடரை கைப்பற்றிய சந்தோஷத்தில் இருந்தோம் ஆனால் ரவிசாஸ்திரி கூறியது எனக்கு ஒரு பக்கம் தான் தூக்கி எறியப்பட்டு விட்டோம் என்பது போல் தோன்றியது,
இதனால் இந்த சம்பவத்தை என் மனைவியிடம் கூறி ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த பேட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
ஒரு ஆரோக்கியமான அணியை பராமரிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாகும், தற்பொழுது ரவி சாஸ்திரி மற்றும் அஸ்வின் இடையில் நடைபெற்ற சம்பவங்கள் போன்று நடைபெற்றால் ஒரு அணியை நல்ல கட்டமைப்புடன் பராமரிக்க முடியாது,
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட்டுக்கு இது போன்ற விஷயங்கள் நடைபெறாமல் அணியை நல்ல முறையில் கொண்டு செல்லவேண்டும் என்ற பெரும் பொறுப்பு உள்ளது.
ஒரு கேப்டனால் இதுபோன்ற சம்பவங்களால் தான் இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்பதைக்கூட உணர முடியாது என்று அதில் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய அணியின் மற்றுமொரு முன்னாள் வீரர் நிகில் சோப்ரா அஸ்வின் கூறிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்,
அதில் ரவிசாஸ்திரி குல்தீப் யாதவ் புகழ்ந்து பேசியது அவருக்கு தன்னம்பிக்கை வரவழைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் தான் பயன்படுத்தும் வார்த்தை மற்றவீரரின் மரியாதையை குறைக்காத வகையில் பேச வேண்டும்,
நிச்சயம் ரவிசாஸ்திரி கூறியதைக் கேட்டு அஸ்வின் மனமுடைந்து போயிருப்பார் என்று நிகழ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.