சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் - 450 விக்கெட்டுகள் எடுத்து 3வது வீரர் என்ற சாதனை படைத்த அஸ்வின்...!

Ravichandran Ashwin Cricket Indian Cricket Team
By Nandhini Feb 09, 2023 01:27 PM GMT
Report

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான முதல் போட்டி இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்தவுடனேயே வெளியேறினார்கள். இப்போட்டியில், லபுஷேன் சிறப்பாக விளையாடினார். இவர் 49 ரன்களும் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

ravichandran-ashwin-completes-450-test-wickets

ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார். 

முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார்.   

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.