ராஜீவ் காந்தி கொலையில் கைதான ரவிச்சந்திரன் சிறையிலிருந்து நிதி வழங்கியுள்ளார்!
சிறையில் சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.5000-ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன்.
தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது இது மாநில அரசிற்கு நிதி பற்றாக்குறையினை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தங்களால் முடிந்த கொரோனா நிதியினை பொதுமக்கள் வழங்கலாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5000 வழங்கியுள்ளார்.
சிறையில் தான் செய்த வேலை கிடைத்த ஊதியத்தை நிவாரண நிதிக்கு ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே ஹார்வர்டு தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.20,000, கஜா புயலுக்கு ரூ.5000 ரவிச்சந்திரன் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.