அவருக்கு ஒரு மேட்ச் போதும் எல்லோரும் வாயை மூடிடுவாங்க : கோலி குறித்து உணர்ச்சிவசப்பட்ட ரவிசாஸ்திரி
விராட் கோலி மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்ப ஓரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் போதும் அதன்பிறகு அனைவரும் கோலியை பற்றி பேசாமல் வாய் மூடி கொள்வார்கள் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
விராட் கோலி
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் குறித்து பேசினார், அப்போது விராட் கோலி குறித்து பேசிய அவர் எப்போதும் ஒரே மனநிலையில் உள்ள விராட்கோலி மீண்டும் பழைய ஃபார்மில் திரும்பிவருவார் எனக் கூறினார்.
மேலும் தற்போது நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்துவிட்டால் போதும் விமர்சகர்கள் வாயடைத்து போய்விடுவார்கள். பொதுவாக பெரிய ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு தேவை அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வர கொஞ்சம் நேரம் எடுக்கும்.
ரவிசாஸ்திரி
இந்த உலகில் சரிவான காலகட்டத்தை எதிர்கொள்ளாத வீரர்களே கிடையாது , கோலி ஒரு ரன் மெசின் அவருக்கு கிரிக்கெட் மீது உள்ள பசி இன்னமும் அடங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகின்றது , 28 ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி இந்த போட்டியில் விராட் தனது பழைய ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது