இப்படியே விளையாண்டால் என்னாகும் ? - தோனியை திட்டிய ரவி சாஸ்திரி வெளியான புதிய சர்ச்சை
தோனி இந்திய அணியில் கேப்டனாக இருந்த போது , அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை திட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டனாக தோனி
மஹேந்திரசிங் தோனி ,இந்திய அணியில் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது இன்னம் சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலிக்கு பிறகு அடுத்த நட்சத்திர வீரர் யார் என்ற கேள்வி எழுந்த போது தனது அமைதியான சின்ன சிரிப்பாலும் அதிரடி ஆட்டத்தாலும் பதிலடி கொடுத்தவர் தோனி.
தோனியை திட்டிய ரவிசாஸ்திரி
இந்த நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வரும் நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தபோது மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் மை டேஸ் வித் தி இந்திய கிரிக்கெட் டீம் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
மெதுவாக விளையாடிய தோனி
அதில் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டில் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது மற்றும் முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றது, அதைத் தொடர்ந்து ஜோ ரூட்டின் அபார சதத்திற்குப் பிறகு இரண்டாவது போட்டியில்தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் களத்துக்கு வந்த தோனி அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக ஆடியது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பேசப்பட்டது.
இதனால் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.