4 மேட்ச் கூட விளையாட முடியல; எப்பவும் காயம் எதுக்கு? சிஎஸ்கே ஸ்டார் வீரரை விளாசிய ரவி சாஸ்திரி
சிஎஸ்கே வீரர் மீது ரவி சாஸ்திரி காட்டமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரவி சாஸ்திரி
ஐபிஎல் 16வது சீசனுக்கு ரவி சாஸ்திரி வர்ணனை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில், சில வீரர்கள் நிரந்தமாக தங்க முடிவு செய்துவிட்டார்கள்.
கூடிய விரைவில் அவர்கள் அங்கு குடியேறுவார்கள் எனக் கருதுகிறேன். இது நல்லதுக்கு அல்ல. தீபக் சஹார் ஒன்றும் அதிக போட்டிகளில் விளையாடிவிட்டு காயம் காரணமாக விலகுவது கிடையாது. அவர் தொடர்ந்து நான்கு போட்டிகளில் கூட விளையாடுவது கிடையாது. மறுபடியும் மறுபடியும் காயம் காரணமாக விலகுகிறார்.
காட்டம்
ஏன், தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கியிருந்து முழு சிகிச்சை எடுத்துக் கொண்டால் என்ன? மீண்டும் 4 போட்டிகளுக்கு பிறகு விளையாடி மீண்டும் காயம் காரணமாக அவதிப்பட்டால், அவர் சிஎஸ்கேவுக்கு தேவையே கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
கம்பேக் கொடுத்த தீபக் சஹார் ஒருசில போட்டிகளில் விளையாடிய பிறகு தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பெங்களூர் சென்று சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.