இந்திய அணிக்கு பயம்... அதனால தான் தோத்து போச்சு...ரவிசாஸ்திரி பேச்சால் சர்ச்சை

Virat Kohli Indian Cricket Team Team India
By Petchi Avudaiappan May 31, 2022 06:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

2021 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி செயல்பாடு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 

2021  ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியிடம் தோற்று இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. 

இதனைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியும், பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியும் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டபோது நடைபெற்ற நிகழ்வு குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். 

இந்திய அணிக்கு பயம்... அதனால தான் தோத்து போச்சு...ரவிசாஸ்திரி பேச்சால் சர்ச்சை | Ravi Shastri Shares India T20 World Cup Secrets

அந்த வகையில்  2021 உலகக் கோப்பை தொடர் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார். அந்த பேட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடிய நிலையில், இந்திய அணி பயந்துவிட்டது. எந்த ஒரு பயமும் இல்லாமல் சிறப்பாக விளையாடினால் எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் எளிதாக சமாளித்து விடலாம் என சொல்வார்கள்.  ஒருவேளை பயந்தால் தோல்வி பயத்தை சமாளிப்பது என்பது கடினம்.

மேலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி விட்டால் அப்போது மிகப்பெரும் நெருக்கடியை ஒரு அணி சந்திக்க ஆரம்பித்துவிடும் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார் .