என்ன நான் ஐ.பி.எல் இருக்கேனா ? அந்தர் பல்டி அடித்த ரவி சாஸ்திரி , காரணம் என்ன?

ahmedabad ipl2021 ravishastri
By Irumporai Dec 24, 2021 06:11 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் களமிறங்குவது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல்டி அடித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இந்த முறை மெகா ஏலம், 2 புதிய அணிகள் என பல்வேறு சுவாரஸ்யங்கள் வரவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் அணிகள் பேசி வருகின்றனர்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அகமதாபாத் அணி தான். சூதாட்ட புகாரில் இருந்து தப்பித்துள்ள அந்த அணி தற்போது வீரர்கள் தேர்வில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் கேப்டனாகவும், ஆரோன் பின்ச், பென் ஸ்டோக்ஸ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உறுதுணை வீரர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டதாகவும், அவரின் பயிற்சியில் இந்த முறை கோப்பையை வெல்ல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்புகள் குறித்து ரவிசாஸ்திரி அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், நான் இப்போதுதான் பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளேன். எனக்கு வெளியுலக காற்றை சுவாசிக்க வேண்டும். இதனால் எந்தவொரு அணியுடனும் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அனைத்து தவறான தகவல்கள் எனக்கூறியுள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, என்னைப்பொறுத்தவரை தற்போது நன்றாக வெளியில் சுற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அணி பயிற்சியாளராக செல்லவில்லை. எனினும் நான் நிச்சயமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு திரும்புவேன், அது எனக்கு பிடித்தமான ஒன்று என ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.