இந்திய அணி இதை கண்டிப்பாக சரி செய்யனும் : இல்லனா கஷ்டம்..ரவி சாஸ்த்ரி கருத்து

By Irumporai Oct 05, 2022 03:06 AM GMT
Report

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு இன்னும் 18 நாட்களே உள்ளது.

ரவி சாஸ்திரி கருத்து

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்த்ரி இந்தியா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் டி20 உலககோப்பை தொடர் என்பது சவால்கள் நிறைந்தது. அந்த தொடரில் நீங்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும்.

இந்திய அணி இதை கண்டிப்பாக சரி செய்யனும் : இல்லனா கஷ்டம்..ரவி சாஸ்த்ரி கருத்து | Ravi Shastri Reveals About India Weakness

முதல் போட்டியிலிருந்தே வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். முதலில் நீங்கள் தோல்வி அடைந்தால், பிறக உங்களுக்கு கஷ்டம் தான். மற்ற அணிகளின் அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டும். 

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பலமே அதன் பேட்டிங்காக தான் இருக்கும். ராகுல், கோலி, சூர்யகுமார் என அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளதை நல்ல விசயமாக பார்க்கிறேன்.

பந்துவீச்சில் பலவீனம்

அந்த தொடரில் பங்கேற்கும் அணியிலேயே இந்தியா தான் நல்ல பலமான பேட்டிங் வரிசை உடைய அணி. ஆனால் பந்துவீச்சில் பலவீனம் உள்ளது. 

ஆனால் இந்தியாவின் ஃபில்டிங் மிகவும் மோசமாக உள்ளது. இப்படி ஒரு ஃபில்டிங் இருந்தால் உங்களால் போட்டியை வெல்ல முடியாது.

இந்திய அணி இதை கண்டிப்பாக சரி செய்யனும் : இல்லனா கஷ்டம்..ரவி சாஸ்த்ரி கருத்து | Ravi Shastri Reveals About India Weakness

உலககோப்பையை பொறுத்தவரை எந்த அணி நன்றாக ஃபில்டிங் செய்கிறார்களோ, அவர்கள் தான் வெல்வார்கள். ஃபில்டிங் இப்படி இருந்தால், பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டியிலும் கூடுதலாக 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ரவி சாஸ்த்ரி கூறினார்.