சென்னை அணியின் படுதோல்விகளுக்கு காரணம் இதுதான்...
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் படுதோல்விகளுக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
இதனிடையே சென்னை அணி 14 போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. இந்நிலையில் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னாவை தேவையில்லாமல் நீக்கியது தான் தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ரெய்னா இருந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் மற்ற பேட்ஸ்மேன்கள் உடன் இணைந்து சென்னை அணியின் வேலையை எளிதாக்கியிருப்பார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.