‘’பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ரவி சாஸ்த்ரி ‘’ - நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, ஒரு பேட்டியில் உண்மையையும், பொய்யையும் கூறி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
2019 உலகக் கோப்பை தொடரை வெல்லாதது குறித்து ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார். அந்த பேட்டியில் தேர்வுக்குழுவினரின் தவறு தான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது,, ஒரே அணியில் தோனி, ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்தது தேவையில்லாதது என்றும் அதற்கு பதில் அம்பத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்து எடுத்து இருக்கலாம் என்றும் கூறினார்.
அம்பத்தி ராயுடு அணியில் இல்லாததற்கு நான் காரணம் அல்ல, எனக்கு இவர் தான் வேண்டும் என்று ஒரு பயிற்சியாளர் எப்படி கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அதே பேட்டியில் 2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா தொடருக்கு தயாராகுமாறு பும்ராவை 3 மாதத்திற்கு முன்பே கூறி, நான் தான் அணியில் அவரை சேர்த்தேன் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.
அது எப்படி பும்ராவை வேண்டும் என்று கேட்டுவிட்டு, அம்பத்தி ராயுடு விவகாரத்தில் என்னால் இவர் தான் வேண்டும் என்று கேட்க முடியாது என்று ரவி சாஸ்த்ரியால் கூற முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் இந்த விஷயத்தில் ரவி சாஸ்த்ரி பொய் கூறியது தெளிவானதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு இதே போன்று தம்மை தேவையே இல்லாமல் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டதாக ரவி சாஸ்த்ரி கூறியிருந்தார்.
ஆனால் அவர் நேர்முகத் தேர்வுக்கு நேரில் வராமல், சுற்றுலா தளத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதால் தான், அவர் அந்த பதவிக்கு பரீசிலிக்கப்படவில்லை என்பதை கூறாமல் மறைத்துவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விராட் கோலியின் தயவால் தான் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் நீடித்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.