கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ரவிசாஸ்திரி - குடும்பத்தினர் மகிழ்ச்சி

Covid Ravi Shastri Indian cricket coach
By Thahir Sep 17, 2021 08:47 AM GMT
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொற்றிலிருந்து குணமடைந்தார் .

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ரவிசாஸ்திரி - குடும்பத்தினர் மகிழ்ச்சி | Ravi Shastri Indian Cricket Coach

இதில் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .

இதைதொடர்ந்து உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண் ,ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனிடையே 5-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த இந்திய அணி வீரர்கள் கலக்கம் அடைந்தனர்.

இதனால் இரு அணிகளுக்கிடையே நடக்கவிருந்த 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் ரவிசாஸ்திரி, பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் குணமடைந்து உள்ளனர்.

ஆனால் அந்நாட்டின் சுகாதார நடைமுறையின் படி விமானத்தில் செல்வதற்கு சி.டி ஸ்கேன் ஸ்கோர் 38 -க்கும் மேல் இருந்தால் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய தகுதியுடன் உள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைக்கும்.

இதனால் இந்த சான்றிதழுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இது எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.