ஒன்டே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோஹ்லி விலகுவார் -
உலக கோப்பை தொடருடன் டி.20 கேப்டன் பதவியில் இருந்துவிராட் கோஹ்லி விலகி உள்ளார்.
அவருக்குபதிலாக ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில், ஒன்டே, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோஹ்லி விலகுவார் என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட்டில் கோஹ்லி தலைமையில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
அவர் அதை விட்டுக்கொடுக்க விரும்பாவிட்டாலும் ,பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாக என்னிடம் கூறினார்.
இதனால்அவர் பதவிவிலக வாய்ப்பு உள்ளது. அவரது மனமும் உடலும்தான் அந்த முடிவை எடுக்கும். கோஹ்லி இதுவரை அணியில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.
அனைவரையும் விட அவர் உடற்தகுதி உடையவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை, மற்ற அணிகளை விட இந்தியா தான் அதிக போட்டிகளில் ஆடுகிறது, என்றார்.