‘இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவை இல்லை..’ - ரவி சாஸ்திரி பேட்டி
'இந்திய அணிக்கு துணை கேப்டன் தேவையில்லை' என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ரவி சாஸ்திரி பேட்டி
இந்நிலையில், 'இந்திய அணிக்கு துணை கேப்டன் தேவையில்லை' என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை கேப்டன் குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். நிர்வாகத்திற்கு லோகேஷ் ராகுலின் ஆட்டத்திறன் தற்போது எப்படி உள்ளது, அவர் எத்தகைய மனநிலையில் உள்ளார் என்பது நன்கு தெரியும்.
என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை. போட்டிக்கு மிகச்சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டுமே தவிர, துணை கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு சிக்கலை உருவாக்கிக் கொள்ளவே கூடாது.
களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்படவில்லையெற்ல், அவர் இடத்திற்கு வேறொருவரை கொண்டு வரலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வந்து விடுவார். ஏற்கனவே முகமது ஷமியும், முகமது சிராஜிம் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். அது மனதளவில் நம்மை வலுப்படுத்திவிடும் என்றார்.