‘அப்ப எல்லாம் பொய்யா கோபால்” - கோலிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ரவிசாஸ்திரி

rohit captain ravishastri
By Irumporai Dec 24, 2021 06:51 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், விராட் கோலியும் எவ்வளவு உற்ற நண்பர்கள் என அனைவருக்கும் தெரிந்ததே.

எனக்கு ரவி சாஸ்த்ரி தான் பயிற்சியாளராக வேண்டும் என்று கேட்டு வாங்கி பணியாற்றினார் விராட் கோலி. ஆனால் கோலிக்கு எதிராகவே தற்போது கருத்து ஒன்றை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரவி சாஸ்த்ரி.

விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரவி சாஸ்த்ரி அளித்த பேட்டியில் : 

விராட் கோலி ஒரு சிறந்த கேப்டனாக பணியாற்றினார். டெஸ்ட் கிரிக்கெட் மீது விராட் கோலிக்கு இருக்கும் பற்று வேறு யாருக்கும் கிடையாது.

ஆனால் டி20 போட்டியில் கேப்டன் பொறுப்பை கோலி ராஜினாமா செய்த பிறகு, ரோகித் சர்மாவுக்கு கதவு திறந்துவிட்டது என்றே அர்த்தம். ஓயிட் பால் கிரிக்கெட்டில்(50 ஓவர், டி20) என்னை பொறுத்தவரை ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும்.

அதனால், ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டி மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் நியமித்த பி.சி.சி.ஐ. முடிவில் எந்த தவறும் இல்லை. இதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன் , இருப்பினும், விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம். விராட் கோலியிடம் முன்பே பேசி முடிவு எடுத்திருக்க வேண்டும்.

முன்அறிவிப்பின்றி மாற்றப்பட்டதாக கோலி கூறியதில் இருந்து தெரிகிறது, இதனை பி.சி.சி.ஐ. தவிர்த்து இருக்கலாம். விராட் கோலி கருத்தை கேட்டுவிட்டோம். இனி பி.சி.சி.ஐ. தலைவர் இந்த விவகாரத்தில் என்ன சொல்ல போகிறார் என்பதை பார்க்க வேண்டும். 

விராட் கோலியை பார்க்கும் போது ஒரு சில நேரம் என்னையே பார்ப்பது போல் இருக்கும். ரன் அடிக்க வேண்டும் என்ற வெறி, கிரிக்கெட் மீதான காதல் எல்லாம் என்னையே போலவே இருந்தது.

இவவாறு ரவி சாஸ்த்ரி அந்த பேட்டியில் கூறி இருந்தார். ரவி சாஸ்த்ரியின் இந்த பேட்டி விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.